ஷங்கர், ராம்சரண் படப் பெயர் அறிவிப்பு : ‘சிஐஓ’ அல்ல ‘கேம் சேஞ்சர்’

27 மார்ச், 2023 – 10:10 IST

எழுத்தின் அளவு:


ராம்சரண்---ஷங்கர்-திரைப்படம்-தலைப்பில்-கேம்-சேஞ்சர்-நாட்-சிஇஓ

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தெலுங்கில் இயக்கி வரும் படத்திற்கு பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. படத்தின் கதாநாயகனாக ராம்சரண் பட எண்ணிக்கையைக் குறிப்பிடும் விதத்தில் ‘ஆர்சி 15’ என அழைக்கப்பட்டு வந்த படத்தின் பெயர் இன்று(மார்ச் 27) ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.

‘கேம் சேஞ்சர்’ என படத்திற்கு பெயர் வைத்து அதற்கான மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். முதலில் இப்படத்திற்கு ‘சிஇஓ’ என பெயரிட்டுள்ள தகவல்கள் வெளியாகின. அவையனைத்தையும் பொய்யாக்கி புதிய பெயரை அறிவித்துள்ளனர். மோஷன் போஸ்டர் காட்சிகள் அனைத்தும் அரசியல் தொடர்பான கிளிப்பிங்காக உள்ளன. எனவே இந்தப்படம் நிச்சயம் அரசியல் சார்ந்து பேசப்போகும் படம் என தெரிகிறது.

கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்குப் பிறகு ராம் சரண் நடித்து வெளிவரும் படம் என்பதால் பான் இந்தியா படமாக இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Source link