பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஷாருக் கான். இவரது பிரமாண்ட பங்களாவான `மன்னட்’ மும்பையின் பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ளது.

வெளிப்புறத்திலிருந்து பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் இந்த பங்களாவின் உட்புறம் எப்படி இருக்கும், என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன, அதன் உருவாக்கம் எப்படிப்பட்டது என்பதை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் `மை லைஃப் இன் டிசைன்’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகம் கடந்த ஞாயிற்றுகிழமை வெளியிடப்பட்டது.

மன்னத்

இப்புத்தகத்தின் முன்னுரையில் ஷாருக் கான், “தன் புத்தகத்தில் என்னென்ன சேர்த்திருக்கிறாள் என்பதைப் பார்க்க நான் அவளாகக் காத்திருக்கிறேன். என் அறையைவிட இடங்களை அவர் சிறப்பாக வடிவமைத்திருந்தால், அந்த இடத்தை இன்னும் சிறப்பாக வடிவமைக்கக் கட்டாயப்படுத்துவேன்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் நேர்காணலில் பேசிய ஷாருக் கானின் மனைவி கௌரி கான் இப்புத்தகம் குறித்தும் ஷாருக் கானின் நூலக அறை குறித்தும் பேசியிருந்தார்.

ஷாருக்கான் குடும்பம்

இதுபற்றி பேசியிருக்கிறார், “படப்பில் இல்லாதபோது ஷாருக் கான் பெரும்பாலும் வீட்டில் அழகாக இருக்கும் நூலகத்தில்தான் இருப்பார். அது பல்வேறு வசதிகள் அடங்கிய நூலகம். பள்ளியின் நினைவுகளும், சூழலும் நிறைந்திருக்கும் விதமாகப் பிரத்யேகமாக அதை வடிவமைத்தோம்” என்று கூறினார். மேலும், தன் மகன் ஆர்யன் கான் அறையைப் பற்றி பகிர்ந்துகொண்ட கௌரி கான், “ஆர்யன் கான் நண்பர்களுடன் இருக்கும் பிரத்யேகமான அறை ஒன்றை வடிவமைத்தோம். அங்கு தன் நண்பர்களுடன் அவரது நேரத்தைச் செலவிடுவார். அங்கு ஏராளமான வசதிகள் செய்து கொடுத்தோம்” என்றார்.



Source link