பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2021-ம் ஆண்டு மகள் வாமிகா கோலி பிறந்தார். பொழுதுபோக்குத் துறைகளில் மிகவும் பிஸியான, அதே சமயம் மிகவும் பிரபலமான ஜோடியாக இவர்கள் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள்.

விராட் - அனுஷ்கா

விராட் – அனுஷ்கா

இந்நிலையில் தங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை இவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளனர். இந்த ஜோடி சமீபத்தில் இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் 2023-ல் கலந்து கொண்டது.

அங்கு சிவப்புக் கம்பள வரவேற்பின்போது இருவரிடமும் சில கேள்விகள் கேட்கப்பட்டன. ‘இருவரில் யார் அதிகம் சர்ப்ரைஸ் கொடுப்பது?’ என்ற கேள்விக்கு பதில் அளித்த விராட் கோலி, “சமீபத்தில் அனுஷ்கா தன் வேலை விஷயமாக பாங்காக் சென்றிருந்தார். நான் வீட்டில் வாமிகாவுடன் இருந்தேன். அவர் மும்பைக்குத் திரும்பும்போது அவரை ஆச்சர்யப்படுத்துவதற்காக ஒரு திட்டம் தீட்டினேன்.Source link