நாகர்கோவிலில் பாம்பு வண்டி எடுத்தது என்று கூறி போலி நவரத்தின கற்களைக் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளித்துள்ளனர்.

நடிகர் விவேக் ஒரு படத்தில் சாலையில் எடுத்த கற்களை அதிர்ஷ்ட கற்கள் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றுவார். இதே போன்ற சம்பவம் நாகர்கோவில் பகுதியிலும் அரங்கேறியுள்ளது. இதுபற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆன்லைன் வாயிலாக புகார் மனு கொடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அளித்த பகுதியை சேர்ந்த லாவண்யா புகாரில், நாகர்கோவில் களியங்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(43) நாகர்கோவில் களியங்காடு பகுதியில் நாகராஜ கோவில் ஒன்று தொடங்கினார். அங்கு வரும் பக்தர்களிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக டெல்லியில் பணிபுரிந்து வந்தேன். ஆன்மீகம் மீது கொண்ட பற்று காரணமாக பதவியை ராஜினாமா செய்து விட்டு இங்கு வந்தேன்.இக்கோவிலுக்கு வருவோருக்கு நாக தோஷம் நீங்கும் என்று கூறி பூஜைகள் செய்தார்.

உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

மேலும், பாம்புகளுடன் வாழ்வதாகவும், இரவில் பாம்புகள் வாந்தி எடுக்கும் போது மாணிக்க கற்கள் கிடைத்ததாகவும் எங்களிடம் கூறினார். அந்த கற்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும் எனவும் தெரிவித்தார். பக்தர்களிடம் அந்த கற்களை கட்டாயப்படுத்தி வாங்க வைத்தார். இதன்மூலம் லட்சக்கணக்கில் அவருக்கு பணம் கிடைத்தது. இதன்மூலம் குறுகிய காலத்தில் சொகுசு கார்கள் , பங்களாக்கள் கட்டினார்.

இதையும் படிங்க: பாலியல் புகார்- பாதிரியார் பெனடிக் ஆண்டோவை காவலில் எடுத்து விசாரிக்கும் காவல்துறை

பூசாரி கொடுத்த நவரத்தின கற்கள், மாணிக்க கற்களை வாங்கி சென்றவர்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. மேலும் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள்.இதுபற்றி பூசாரியிடம் கூறிய போது தன்னிடம் உள்ள ஸ்படிக லிங்கத்தை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், இன்னல்கள் அகலும் என்றார். அந்த ஸ்படிக லிங்கம் ரூ.75 ஆயிரம் எனவும் தெரிவித்தார். இதனை நம்பி ஏராளமான பெண்கள் ஸ்படிக லிங்கத்தை வாங்கி சென்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் அவர் மோசடி கற்களை கொடுத்து ஏமாற்றினார்.

பூசாரியின் மோசடி தெரியவந்ததால் நாங்கள் கோவிலுக்கு செல்வதை தவிர்த்தோம். இந்த நிலையில் எங்களின் தந்தை உடல் நலக்குறைவால் இறந்தார். ஆனால் பூசாரியை நம்பாமல் இருந்ததாலேயே எங்களின் தந்தை இறந்தார் என்று அவர் கூறுகிறார். மேலும் எங்களை தீர்த்து கட்டிவிடுவதாகவும் கூறிவருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்: ஐ.சரவணன், நாகர்கோவில்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link