ராமநாதபுரம் மாவட்ட பாஜக கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், 5000 பேரை திரட்டி கமலாலயம் செல்லவுள்ளதாக, மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கதிரவன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்படுவதால், அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட பாஜகவின் புதிய தலைவராக தரணி முருகேசன் நியமிக்கப்பட்டார்.

உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

இந்த நிலையில், நியூஸ் 18க்கு பேட்டியளித்த மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் கதிரவன், கட்சியின் வளர்ச்சிக்காக 24 மணி நேரமும் பாடுபட்டதாகவும், 4 கோடி ரூபாய் செலவு செய்து பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் கூறினார். எந்த விளக்கமும் கேட்காமல் தன்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக கூறிய கதிரவன், மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பிரச்னைக்கு தீர்வு காண்போம் என தெரிவித்தார்.

செய்தியாளர் : பொ. வீரக்குமரன் (ராமநாதபுரம்)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link