ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் எடுத்துக்கொண்டதால், உடற்பயிற்சி கூட பயிற்சியாளர், ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகேயுள்ள நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது, 25 வயது மகன் சபரிமுத்து என்கிற ஆகாஷ், நடுகுத்தகையில் உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் மாஸ்டராக வந்துள்ளார். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிகளை குவித்த ஆகாஷ், மார்ச் மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில், கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். மேலும், அதிகளவில் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி ஆகாஷுக்கு ரத்த வந்துள்ளது. இதனை அடுத்து, உறவினர்கள் அவரை உடனடியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தண்டலம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் ஆகாஷின் 2 சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆபத்தான நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷுக்கு, தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து(திருவள்ளூர்)

திருவள்ளூர்

திருவள்ளூர்

கடந்த ஒரு வாரமாக மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் ஆகாஷ் உயிரிழந்தார். கடுமையான உடற்பயிற்சியுடன் கட்டுடலைக் கொண்டுவர அதிகளவில் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொண்டதே மரணத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. ஜிம் மாஸ்டரின் மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அமைச்சுப் பணியாளர்கள், காவல் நிலைய எழுத்தாளர்களுக்கு நெல்லை எஸ்பி பாராட்டு – ஏன் தெரியுமா?

இதேபோன்று, கடந்த மாதம் கடலூர் மாவட்டத்தில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்று, சேலம் மாவட்டம் கொல்லப்பட்டியைச் சேர்ந்த வீரர் ஹரிஹரன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஆகாஷின் மரணம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link