தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலுக்கு 12 ஆண்டுகள் கழித்து விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம். 3 கைகள் உடைய காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள கீழப்பாவூர் காளியம்மன் கோவில் இந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்கிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் இரவு தெரு முழுக்க வண்ண விளக்குகள் பூ அலங்காரங்கள் என இந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. காளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் செய்யப்பட்டது.

கும்பாபிஷேகம் நம்மில் பலர் பங்கேற்று இருப்போம், ஆனால் கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் என்னென்ன வழிபாடுகள் நடக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் நடைபெறும் பூஜையில் கருவறையில் இருக்கும் அம்மனின் சக்திகள் கும்பத்தில் ஏற்றப்பட்ட பின்னர் சாமியின் சிலையை எடுத்து 12 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட தங்க காசுகள், தங்க தகடுகள், செம்புத் தகடுகள் மற்றும் காசுகள் என அனைத்தையும் எடுத்த பிறகு சாமியின் சிலையை சுத்தம் செய்வார்கள்.

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

இதையும் படிங்க : மதுரையைப் பற்றி தெரிந்துகொள்ள பிரத்யேகமாக மேப் வெளியீடு!

அதன்பிறகு, கும்பக்கங்களுக்கு பூஜை செய்யப்பட்டு, தீபாரதனை செய்து ஹோமம் வளர்க்க தொடங்குவர். ஹோம குண்டத்தில் தீப ஆராதனை செய்து, நெய், தானியங்கள், பொறி ஆகியவற்றைக் கொண்டு பூஜைகள் செய்யத் தொடங்குவார்கள். அடுத்த நாள் அதிகாலையிலேயே சூரிய உதயத்தின் பொழுது கும்பங்களுக்கு நீரூற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெறும்.

அதன்படியே இந்த காளியம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர். மேலும் முருகனுக்கு மயில் வாகனம், சிவனுக்கு நந்தி வாகனம் போல காளியம்மனுக்கு சிங்க வாகனம் மற்றும் சுலாயுதம் சன்னதியின் முன் வைக்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் காளியம்மனுக்கு நான்கு கைகள் இருப்பது வழக்கம் ஆனால் இந்த கோயிலில் உள்ள காளியம்மனின் சிலையில் மூன்று கைகள் மட்டுமே இருப்பதற்கான காரணம் இன்றளவும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. இந்து கோவில் சுமார் 250 ஆண்டு பழமையான கோவிலாகும். அதனால் இந்த அம்மனின் அவதாரத்தை குறிப்பிடுவது போல் எந்த கல்வெட்டுகளும் இந்த கோவிலில் இடம் பெறவில்லை.

கும்பாபிஷேகம் அன்று காளியம்மன் கோவிலில் புதிதாக விநாயகர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. மேலும் கருப்பசாமி, வேர்வை புத்திரர், பைரவர் உள்ளிட்ட சாமிகளுக்கும் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2 நாட்கள் ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link