தஞ்சாவூரில் உள்ள 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் சிதலமடைந்து காணப்படுவதால் பொழிவு பெறுமா என பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

கோவில்களுக்கு புகழ்பெற்ற மாவட்டங்களில் தஞ்சை மாவட்டம் முக்கியமானது. தஞ்சையில் சோழர் காலத்தில் நிறைய கோவில்கள் கட்டப்பட்டன. அந்த வழியில் வந்த சோழ அரசரால் அம்மனுக்கு என கட்டப்பட்ட மிக முக்கியமான கோவில் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்.

தஞ்சை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680-இல் திருத்தல் யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 5 கி.மீ தூரத்தில் உள்ள புன்னைக்காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து, புன்னைகாட்டிற்கு வழியமைத்து அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

கோயில் சிறப்புகள் :

இந்தக் கோவில் 5 காலகட்டங்களில் ஆண்ட ஐந்து மன்னர்களால் கட்டப்பட்டது. இத்திருக்கோயிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்ட ஒரு தனிச்சிறப்பாகும்.

ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்தினும், சிரசிலும் முத்து, முத்தாக வியர்வை தானாகவே மாறிவிடும் வழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே இந்த அம்மனை முத்துமாரியம்மன் என்று அழைக்கின்றார்கள். இக்கோயிலில் அம்மனை காண எண்ணும் பொதுமக்கள் வந்த வண்ணமே இருப்பார்கள்.

இதையும் படிங்க : தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு.. இதுதான் காரணமா?

சிதிலமடைந்து காணப்படும் கோயில் :

இந்நிலையில் இக்கோயிலின் பல பகுதிகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன.முக்கியமாக கோயிலை சுற்றி உள்ள மண்டபத்தின் தூண்கள் உடைந்து கோபுரத்தில் உள்ள சிலைகள்சேதமடைந்து,கோயிலின் அழகை மறைக்கின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் தினந்தோறும் வந்து செல்லும் இக்கோயில் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே கோயிலை புது பொலிவுடன் மாற்றி தர அரசு முன் வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link