ஐபிஎல் 2023 போட்டியுடன் தோனி ஓய்வு பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது கடைசி ஆட்டத்தை சென்னையில் விளையாட வேண்டும் என்றும் தோனி விருப்பம் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் தோனியின் ஓய்வு பற்றி கேட்கப்பட்டது. செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த பதில்:

கடந்த 2-3 வருடங்களாக இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி எனக் கேட்டுக்கொண்டு வருகிறேன். ஆனால் இன்னும் பல போட்டிகளில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதியுடன் அவர் உள்ளார் என்றார்.

2008 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் தோனி, 234 ஆட்டங்களில் 4978 ரன்கள் எடுத்துள்ளார். நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார்.

சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தை குஜராத் அணிக்கு எதிராக நாளை விளையாடவுள்ளது. ஞாயிறு அன்று, ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூருவில் தனது முதல் ஆட்டத்தை மும்பை விளையாடவுள்ளது.Source link