விழுப்புரம் மாவட்டத்தில் வறுமையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
சர்வதேச விளையாட்டு/தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது வறுமையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணைதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் விண்ணப்பதாரர்கள் சர்வதேச அல்லது தேசிய அளவிலான இந்திய விளையாட்டு சம்மேளனம் அனுமதித்த பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், பல்கலை கழகங்களுக்கு இடையோன போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கம், மற்றும் ஒன்றிய அரசின் விளையாட்டு கழகம் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற தமிழகம் சார்பாக பங்கேற்ற வீரராகஇருக்கவேண்டும்.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
மேலும் 31.01.2023 அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்கவேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ. 6000 முதல் 15,000-க்குள் இருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள் 19.04.2023. விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பதிவு செய்த நகல் தங்களது விளையாட்டு சான்றிதழ்களுடன் இணைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளஞர் நலன் அலுவலரிடம் 24.04.2023 ஆம் தேதிக்குள் அசல் சான்றிதழ்களை நேரில் வந்து சான்றிதழை சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட ஓய்வூதியம் தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ
(அ.பே.எண்: 7401703485) தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: