விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா வருவதையொட்டி 21 தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகரில் அமைந்துள்ள பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு பொங்கலுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் மக்களின் வாழ்வியலோடு ஒன்றியுள்ள இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது பொங்கலுக்கு அடுத்த நாள் தீச்சட்டி எடுக்கும் நிகழ்வு. நினைத்தது நடக்க வேண்டி நேர்த்திகடன் போட்ட பக்தர்கள் விரதம் இருந்து கையில் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திகடன் செலுத்துவர். அதிலும் குறிப்பாக இங்கு 21 ஒரே நேரத்தில் தீச்சட்டி எடுக்கும் பழக்கம் பரவலாக காணப்படுகிறது.

21 தீச்சட்டி எடுத்து விநோத வழிபாடு

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

அதெப்படி ஒரு மனிதன் ஒரே நேரத்தில் 21 தீச்சட்டிகளை எடுக்க முடியும் என்றால், தகரத்தில் செய்யப்பட்ட கிண்ணங்களை வளையத்தில் பொருத்தி அதை உடலில் மாட்டிக்கொண்டு அந்த கிண்ணத்தில் நெருப்பு மூட்டி தீச்சட்டி எடுப்பார். இது போல் 51, 101 என வேண்டுதலுக்கு ஏற்ப தீச்சட்டி எடுக்கும் பழக்கம் உள்ளது என்கிறார் விருதுநகரில் 35 ஆண்டுகளாக 21 தீச்சட்டிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஜெயக்கொடி. பொங்கல் சாட்டியதுமே விரதம் கடைபிடித்து தீச்சட்டி வளையம் செய்து பணி செய்வதாக தெரிவித்தவர், உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் கூடி ஆர்டர் செய்து இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சாதாரணமாக ஒரு தீச்சட்டி கையில் எடுத்து வந்தாலே அதன் அனல் அதிகமாக இருக்கும். அப்படி இருக்கையில் 21 தீச்சட்டிகளை உடலில் எடுத்து செல்ல வேண்டும் என்று மனவலிமை அவசியம் என்றவர் அதற்காக மக்கள் கடும் விரதம் கடைபிடிப்பதாக கூறினார். கந்தாரா போன்ற படங்களை பார்த்து அவர்களின் வழிபாட்டு முறை கண்டு வியந்து வரும் நமக்கு நம்மூரில் உள்ள இது போன்ற பிரம்மாண்டமான வழிபாட்டு முறைகள் தெரிவதில்லை.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link