இந்த பேச்சு வரும் காலங்களில் அவரது தீவிர அரசியல் பிரவேசத்தை தான் காட்டுகிறது. மோடிக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்வார். ராகுல்காந்தி விவகாரம் அவரை மேலும் தூண்டிவிட்டிருக்கிறது. 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பறந்த அளவில் பிரச்சாரம் மேற்கொள்வார். காங்கிரசை வழிநடத்தும் இடத்திற்கு வர மாட்டார்.

அகில இந்திய தலைவர் கார்கேவிடம் அந்த பொறுப்பை கொடுத்துவிடுவார்கள். வரும் தேர்தலில் கூட்டணி குறித்து ராகுலும், பிரியங்காவும் பேசமாட்டார்கள். கார்கே அந்த விஷயத்தை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார். ராகுல் விஷயத்தில் கூட எதிர்கட்சிகளை ஒன்றிணைத்துவிட்டார். ராகுல் காந்தியை முன்னிறுத்தினால் மம்தா, கெஜ்ரிவால் கட்சியினர் வரமாட்டார்கள்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
ட்விட்டர்

இதுவே கார்கே அழைத்தால் வந்துவிடுவார்கள். ஏனெனில் சீனியர் காரணமாக அனைவரும் மதிப்பு கொடுப்பார்கள். வரும் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றினையும் போது பாஜக கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய கூடாது என்பதற்காக அனைத்து வேலைகளையும் பாஜக செய்கிறது. அதையெல்லாம் தாண்டி தான் வெற்றி பெற வேண்டும்” என்றார்.Source link