பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில், கணக்குபாடத்தில் மாணவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான கேள்வி மற்றும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பதற்கான வழிமுறைகளும், தேர்ச்சி மட்டுமே பெற்றால் போதும் என நினைக்கும் மாணவர்களுக்கு தஞ்சை வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஆர்த்தி மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதில், பத்தாம் வகுப்பில் மொத்தம் 8 அத்தியாயங்கள் (அத்தியாயம்)உள்ளன.இதில் முதல் 5 அத்தியாயத்தைதெளிவாக படித்தாலே 100 மதிப்பெண் எடுப்பது மிகவும் எளிது. முதல் (அத்தியாயம்) அத்தியாயம் (அல்ஜீப்ரா) இயற்கணிதத்தில் 2 மதிப்பெண் கேள்விகள் 2 கேட்கப்படுகிறது. ஒரு மதிப்பெண் கேள்வி, 3 கேட்கப்படுகிறது, ஐந்து மதிப்பெண் வினா மூன்று கேட்கப்படுகிறது.இதில் கவனம் செலுத்தினாலேமொத்தம் 22 மதிப்பெண் பெற்றுவிடலாம்.

ஆயத்தொலை வடிவியல் (Coordinate geometry)பாடத்தில் 18 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அளவியல் பாடத்தில் 16 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படுகின்றன. எண்களும் தொடர்வரிசைகளும்(எண்கள் மற்றும் வரிசை) பாடத்தில் 16 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகின்றன. வரைபடம்( வடிவியல்) 16 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

இந்த 5 பாடத்தை மட்டும் தரவாக படித்தாலே 70 மதிப்பெண்கள் எளிதாக எடுக்க முடியும்(உறவுகள் மற்றும் செயல்பாடு) கணிதம் உறவுகளும் சார்புகளும், பாடத்தில் 9 மதிப்பெண்களும் ஒதுக்கப்படுகிறது, முக்கோணவியல் (Trigonometry)மற்றும்புள்ளியியல் (புள்ளிவிவரம்) பாடத்தில் 8 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது. முதல் ஐந்து பாடத்தையும் இந்த மூன்று பாடத்தையும் நன்கு தரவாக படித்தாலே எளிதாக 100 மதிப்பெண்கள் எடுக்க முடியும்

கட்டாய கேள்விகள் (கட்டாய கேள்வி) :-

1. இயற்கணிதம் ( அல்ஜீப்ரா)- 5 மதிப்பெண் கேள்வி ( கட்டாயம் கேட்கப்படுகிறது)

2. அளவியல் (Mensuration)2 மதிப்பெண் கேள்வி ( கட்டாயம் கேட்கப்படுகிறது)

மாறுபட்ட நீல அச்சு:

Blue printதற்போது இருக்கும் கேள்விகள் மாறுபட்டதாகவே உள்ளது.அதனால் முக்கோணவியல் பாடத்திலும் அளவியல் பாடத்திலும் உள்ள இரண்டு மதிப்பெண் கேள்விகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இது போல திட்டமிட்டு படித்தாலே கணித பாடத்தில் எளிதாக அதிக மதிப்பெண் எடுக்க முடியும்.

தேர்ச்சி பெற்றால் போதும் என நினைக்கும் மாணவர்கள் எளிதாக 37 மதிப்பெண்களை எடுக்க முடியும். அதில் ஒரு மதிப்பெண் வினா மொத்தம் 14 கேட்கப்படுகிறது அதில் 12 வினா புத்தகத்தில் உள்ளதையே கேட்கிறது.அதனால் அதில் கவனம் செலுத்த வேண்டும். வரைபடம் முக்கோணம் வரைதல்(Craphs, geometry) பாடத்தில் பதினாறு மதிப்பெண் கையில் உள்ளது, சிலமுறை தொடுகோடு கேட்கலாம்.வடிவொத்த முக்கோணங்கள் வரைதல்( ஒத்த முக்கோணம்) கேட்கலாம் எனவே இதை மாற்றி இரண்டையும் தரவாக படிக்க வேண்டும்.

இதை செய்தாலே முக்கோணம் வரை எட்டு மதிப்பெண்கள் எடுத்து விடலாம், அடுத்து, வரைபடத்தில் நன்கு கவனம் செலுத்தினால் 8 மதிப்பெண்கள் எடுத்து விடலாம். நிச்சயம் தேர்ச்சி பெற முடியும்.

எனவே மாணவர்கள் எந்த பதற்றமும் இன்றி தேர்வை எளிதாக கையாண்டு அதிக மதிப்பெண்களை எடுக்க வாழ்த்துக்கள் என ஆசிரியை ஆர்த்தி கூறினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link