கோவிட் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் நோய்த்தடுப்பு நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

WHO உலக சுகாதார அமைப்பு

WHO உலக சுகாதார அமைப்பு

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பெரியவர்கள் மற்றும் இளம் வயதினர், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் போன்றோர் அதிக முன்னுரிமை கொண்ட குழுவினராகக் கருதப்படுகிறார்கள்.

இவர்கள் கோவிடின் கடைசி தடுப்பூசி செலுத்தி 6 அல்லது 12 மாதங்களுக்குப் பிறகு, கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுகையில், கடுமையான நோய்க்குள்ளாகும் அபாயத்தில் உள்ளனர்.



Source link