தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் 500 ஏக்கர் அளவில் ஓலா தொழிற்சாலை அமைய உள்ளதாக மாநில வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாநில வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

குறிப்பாக பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் 7.30 கோடி ரூபாய் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘தருமபுரியில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் இருந்த பிரச்சனைகள் தற்போது தீர்க்கப்பட்டு, அங்கு தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சுமார் 17 கோடி ரூபாய் மதிப்பில் சிப்காட் நுழைவாயில் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

500 ஏக்கர் பரப்பளவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொழிற்சாலைகள் இங்கு அமைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைக்கப்படும். எதிர்காலத்தில் தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் கண்டுள்ள தொழில் வளர்ச்சியை அடையும்.

4,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் இரண்டும் தற்போது மறு மதிப்பீடு செய்து 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேளாண்துறை மூலம் சிறுதானியங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சிறுதானியங்கள் பயிரிடுவதில் தருமபுரி மாவட்டம் முக்கிய இடத்தில் உள்ளது’ என்று தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தல்- எடப்பாடி பழனிசாமி சூசகம்

மின்சாரம் தாக்கி காட்டு யானைகள் உயிரிழப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‘தாழ்வான பகுதிகளில் மின் கம்பிகள் சீர் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link