மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம்பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் என பல இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. ஒரு கடை ஒரு நபருக்கு மட்டும் தான் என்ற அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளை பலர் உள்வாங்கியுள்ளனர்.

உதாரணமாக ஒரு கடை 1000 சதுரடி என்றால் அதை இரண்டு 500 சதுரடி என தனித்தனியாக பிரித்து விடுவர். ஒரு 500 சதுரடியை வாடகைக்கு எடுத்த நபர் கொண்டு, மற்ற 500 சதுரடியை வேறு நபருக்கு உள்வாடகைக்கு விட்டு விடுவர். உள்வாடகை விடும் கடைக்கு தங்கள்இஷ்டத்திற்கு வாடகையை வசூலிக்கிறார்கள்.

‘மாப்பிள்ளை அவரு தான் ஆனால், சட்டை என்னோடது’ என்பது போல் மாநகராட்சி கடைகளை சிலர் தனக்கு சொந்தமாக்கி கொண்டு உள்வாடகைக்கு விடும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மோசடி பேர்வழிகள் மாநகராட்சிக்கு வாடகை செலுத்துவது இல்லை. இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. யார் பெயரில் கடை உள்ளது, வாடகை உள்ளிட்ட வரிகளை செலுத்துகிறார்களா, உள் வாடகைக்கு விட்டுஉள்ளனரா என மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட வேண்டும்.

சமூக ஆர்வலர் பெரியசாமி கூறினார்:

மாட்டுத்தாவணியில் 186 கடைகள் உள்ளன. அதில், சில கடைகளின் சுவர்களை உடைத்து இரண்டு கடைகளாக்கி உள் வாடகைக்கு விட்டுஉள்ளனர். உரிய ஆவணங்களும் கடைக்காரர்களிடம் இல்லை.

இது குறித்து அறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதே போல் கூடுதல் விலைக்கு பொருட்களை விற்கும் கடைக்காரர்கள்மீது தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விளம்பரம்Source link