தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலின் துணைக்கோயில் ஆகும். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
தொடர்ந்து 13ம் தேதி நடைபெறும் இந்த விழாவில் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் காலை, இரவு ஆகிய இரண்டு வேளைகளும் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை ராமசாமி பட்டர் ஏற்றி வைத்தார்.
இதையும் படிங்க | தென்காசியில் கொட்டும் மழை.. மல்லிகை சாகுபடி குறைவால் விவசாயிகள் கவலை!
உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)
இதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வானதேரோட்டம் 11ஆம் நாளான ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் பஞ்சபூத தலங்களில் கரிவலம் பால்வண்ணநாதர் சுவாமி கோவில் நெருப்பாகவும், சங்கரன்கோவில் சங்கரநாராயணன் கோவில் நிலம் ஆகவும், தென்மலை கோவில் காற்றாகவும், தேவதானம் கோவில் ஆகாயமாகவும், பஞ்ச பூத சிவ தலங்களாகவும் இவை ஐந்தும் கருதப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: