மல்லிகை பூக்கள் கோடை காலங்களான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிக அளவில் பூக்கும் ஆனால் தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு தற்போது ஒரு விசித்திர பிரச்சனை வந்துள்ளது. எப்போதாவது மாவட்டத்தில் மழை பொழிவதால் மல்லிகை பூக்கள் அதிக அளவில் கிடைப்பதில்லை என்று விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

மலர்களின் ராணி என்றால் அது மல்லிகை தான். விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பயிர்களில் மல்லிகை ஒன்று என்றால் சொல்லலாம் . அதன்படி தென்காசி மாவட்டத்தில் மல்லிகை சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. மல்லிகை செடி வளர்ப்பு முறைகள், சவால்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் எப்படி? என்பது குறித்து தெளிவாக இந்த பதிவில் விளக்குகிறார் விவசாயி பேச்சியம்மாள்.

மல்லிகை என்பது பத்து வருடங்கள் வரை மகசூல் தரும் பயிர் ஆகும். மல்லிகை செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப மகசூல் அதிகரிக்கும். மல்லிகையை நடவு செய்யும் போது செடிக்கு செடி இடைவெளி 4க்கு 4 அல்லது 5க்கு 4 அடி என்று இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். மண்ணின் வளத்திற்கு ஏற்ப மல்லிகை செடிக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மல்லிகையில் களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

செடிகளை நடவு செய்த ஆறாம் மாதம் முதல் பூக்கள் பூக்கும். ஏப்ரல் மாதம் முதல் அதிகமாக துளிர்கள் தோன்றி பிறகு மொட்டுகள் எடுத்து பூக்க ஆரம்பிக்கும். மல்லிகை பூவை பொறுத்தவரை வெயில் காலங்களில் நன்றாக வளரும். மல்லிகை பூவிற்கு ஒரு வாரத்திற்கு ஒரு நாள் தண்ணீர் விட வேண்டும்.

மல்லிகைப் பூ மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் மாதங்களில் தான் அதிக அளவு பூக்கும். ஆனால் தற்போது தென்காசி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் பூக்கள் குறைவாகவே பூக்கின்றன” என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link