தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற 29 வீரர்-வீராங்கனைகளுக்கு 41 கிராம் தங்க காசுகள் கொடுத்துதிண்டுக்கல்லில் கௌரவிக்கப்பட்டது.

அகில இந்திய டேக்வாண்டோ சம்மேளன தலைவராக டாக்டர்ஐசரி கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா மற்றும் 2023ம் ஆண்டு தேசிய அளவில் பாண்டிச்சேரி, ஒரிசா, தெலங்கானா மற்றும்ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேக்வாண்டோ போட்டிகள்நடைபெற்றன.

இந்த போட்டிகளில்வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் 29 பேருக்கும் பரிசு வழங்கப்பட்டது. அதன்படி,தங்கம் வென்றவர்களுக்கு 2 1/2 கிராம் தங்க நாணயம், வெள்ளி பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு 1 1/2 கிராம் தங்க நாணயம், மூன்றாம் இடம் பெற்றுள்ளன வீராங்கனைகளுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டன.

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

மேலும் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை மாநகராட்சி மேயர் இளமதி வழங்கினார்.இந்நிகழ்வில் அடியனூத்துஊராட்சி தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட செயலாளர் ஜோதிபாசு செய்திருந்தார். இதில்,பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பயின்ற M.மோனா ஸ்ரீ , மற்றும் நீலகிரியை சேர்ந்த அருளரசி ஆகியஇருவரும்புதிய அணிக்கு தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link