இவை பரவலாக பேசப்பட்டுவந்த நிலையில் பிரங்கா சோப்ராவின் கருத்துக்கு கங்கனா ரணாவத், மீரா சோப்ரா, விவேக் அக்னிஹோத்ரி, சேகர் சுமன் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘ஆதிபகவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்தி நடிகை நீது சந்திராவும் டிவிட் தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார்.

நீது சந்திரா

நீது சந்திரா

சமீபத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “நானும் இதுபோன்ற பிரச்னைகளையெல்லாம் சந்தித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, நிறைய பேர் உள்ளனர். நீங்கள் திரைப்படக் குடும்பத்திலிருந்து வரவில்லை என்றால் பாலிவுட் துறையில் பட வாய்ப்புக்காகப் போராட வேண்டும். அதையும் மீறி வாய்ப்பு கிடைத்தால் அது நீண்ட காலத்திற்குப் பிறகே கிடைக்கும். இதனை பிரியங்கா உட்பட பலரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் இதுபற்றிப் பேச யாரும் முன்வருவது இல்லை என்பதுதான் விஷயம்” என்று கூறியிருக்கிறார்.Source link