தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகியிருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்தியாவின் அவெஞ்சர்ஸாக மாறியிருக்க வேண்டிய இப்படம் சிறுசிறு குறைகளால் அதனைத் தவறவிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தின் குறைகளை மேம்படுத்தி இரண்டாம், மூன்றாம் பாகங்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுபற்றிக் கூறியுள்ள பிரம்மாஸ்திராவின் இயக்குநர் அயன் முகர்ஜி, “பிரம்மாஸ்திரா முதல் பாகத்திற்குக் கிடைத்த அன்பு மற்றும் விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு, இப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்களை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். ” என்று கூறியுள்ளார்.Source link