2022-23-ம் ஆண்டு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்விற்கு தயாராகி வருகின்றனர்.

தேர்வு குறித்து மாணவர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் தஞ்சாவூர் வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வரும் மேகலா,மாணவர்களுக்குத் தேர்வு குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.

பயம் வேண்டாம்:-

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

தேர்வு குறித்தோ, தேர்வு எழுதும் அறையிலோ வினாத்தாளை பார்த்தோ பயம் வேண்டாம். அரசு உங்களுக்கு எல்லா சுதந்திரத்தையும் கொடுத்துள்ளது. தெரிந்த கேள்விகளை முதலில் எழுத்துக்கள் தெரியாததை பிறகு யோசித்து எழுதுங்கள்.

ஆனா எது எழுதினாலும் கேள்வியின் எண்ணத்தைக் குறிப்பிடுங்கள்.குழப்பத்தில் எழுதிய கேள்விகளை மறுபடி எழுதக் கூடாது.. எழுத்து விளக்கக் காட்சி அழகாக இருக்க வேண்டும். எழுத்து அழகா இருந்தால் முழு மதிப்பெண் பெற வாய்ப்பு அதிகம் உள்ளது.

முக்கிய வார்த்தையை குறிப்பிடுங்கள்:-

எந்த பாடமாக இருந்தாலும் சரி 10 வரியில் பதில் ஏழுதினாலும் முக்கிய வார்த்தைகளை குறிப்பிடுவது அவசியம் என்று மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.இதெல்லாம் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை செயல்பாடுகள்.

நண்பர்களிடம் எதிர்மறையான கேள்விகளைக் கேட்கவோ-எடுத்துக்கொள்ளவோ ​​வேண்டாம், நான் இதைப் படிச்சிட்டேன் நீ இன்னும் படிக்கலையா, நான் இதெல்லாம் படிச்சிட்டேன்இந்தக் கேள்வி தேர்வில் வரதா என்றகுழப்பத்தோடு படிக்க வேண்டாம்.ஆசிரியர்கள் சொல்வதை மட்டும் முழுமையாகக் கேட்டுப் பாருங்கள்.

சமூக அறிவியல் பாடத்தை பொருத்த வரையில், முதல் மற்றும் கடைசி 5பாடத்தை முழுமையாக படிக்க வேண்டும். நீங்கள் படித்ததை தான் கேள்விகளாக கேட்பார்கள். சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது எளிது என்றாலும் தற்போது மாற்றப்பட்டுள்ளகேள்வி அமைப்பால் கவனத்துடன் படியுங்கள். ஆனா ரொம்ப நேரம் படித்து குளிக்க வேண்டாம்.

அதிகாலையில் மற்றும் இருவு 10 மணி வரையும் படித்தாலே போதுமானது. உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மேலும்,தேர்வு எழுத தயாராகி வரும் மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link