பாஜக தொடுத்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து மத்திய அரசு தகுதி நீக்கம் செய்தது. இதனைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள பிள்ளையார் கோயில் திடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் தோழமை கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய ப.சிதம்பரம், “மக்கள் மத்தியில் பேசுவது தான் ஜனநாயகத்தின் உச்சம். உண்மையான ஜனநாயகம். நல்ல வேலை இதை மோடி அரசு தடை செய்யவில்லை, ஆனால் இதை தடை செய்ய மாட்டார்கள் என்று எண்ணிவிட முடியாது. ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து ஆளை கடிப்பதை போல் நாடாளுமன்றத்தை முடக்கி பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்ததை போல் பொதுக் கூட்டத்தையும் முடக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார்.

ஜனநாயகம் குரல் ஒடுக்கப்படுகிறது. ராகுல் காந்திக்கு ஏற்பட்ட ஒடுக்குமுறை நாளை திமுக, விசிக, முஸ்லிம் லீக் ,பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் என யாருக்கு வேண்டுமானாலும் சட்டமன்ற வரலாம். உங்கள் சுதந்திரமும் என் சுதந்திரமும் வேறு வேறு இல்லை என்று பெரிய அறிஞர்கள் கூறியுள்ளனர். உன் சுதந்திரம் ஒடுக்கப்பட்டால் என் சுதந்திரமும் கொடுக்கப்படுகிறது.

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

நிகழ்ச்சியை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வதற்காக போகிறார். அதுவே ஒரு குற்றமா, நீதிமன்றத்திற்கு நேரடியாக போனதில் என்ன தவறு என்று சொல்லுங்கள், நீதிமன்றம் ஜாமீனை உறுதிப்படுத்துகிறது. சட்டம் வேறு, நீதி வேறு. சட்டம் தடுமாறலாம் நீதி வெல்லும். சமூக நீதி மாநாடு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றார்.

செய்தியாளர்: ரியாஸ்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link