வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘என் விகடன்’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

கோடை காலம் எங்கு பார்த்தாலும் நுங்கு, இளநீர் , தர்பூசணி, மாம்பழம்… இவற்றையெல்லாம் பார்த்ததும் சின்ன வயதில் அம்மா செய்து கொடுத்த இனிப்புகளுடன் கோடை கொண்டாடிய ஞாபகம் வந்தது.. அம்மா எப்பவுமே வித்தியாசமா ரெசிபிகள் செய்வதில் கில்லாடி. அம்மா செய்து கொடுத்து என் நினைவில் இருக்கும் சில கோடைகால ரெசிபிகள் இதோ.

தர்பூசணி டைமண்ட் நான்கு தர்பூசணி துண்டுகளின் தோல் விதைகளை நீக்கி சதைப்பகுதியை சின்ன சின்னத் துண்டுகளாக்கி மிக்ஸியில் 200 கிராம் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொண்டு இதனுடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி, அரை கிலோ மைதா, உருக்கிய வெண்ணெய் 50 கிராம் இரண்டு டேபிள்ஸ்பூன் எள், சேர்த்து சின்னவையாகப் பிசைந்து எடுத்து, 20 , சப்பாத்திகளாக தேய்த்து டைமண்ட் வடிவத்தில் வெட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து தருவார்கள்.

சுவையில் அசத்தும் இந்த தர்பூசணி டைமண்ட்.
மாம்பழ கீர் கால் கப் பாஸ்மதி அரிசியைக் கழுவி சுத்தம் செய்து தேவையான நீர் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.Source link