ராணிப்பேட்டை அருகே தண்ணீர் பாம்பை வாயில் கடத்தி வீடியோவாக பதிவு செய்து 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன்(33) சூர்யா(21) மற்றும் சந்தோஷ்(21). இந்த மூவரும் கடந்த மாதம் 15ம் தேதி அவர்களது குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்த தண்ணீர் பாம்பு ஒன்றை கையில் பிடித்துள்ளனர். அதோடு நிற்காமல் பாம்பை வாயால் கடித்து இரு துண்டாக்கி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(ராணிப்பேட்டை)
வீடியோ வைரலான நிலையில், சென்னை வனத்துறை அலுவலகத்தில் இருந்து கிடைத்த தகவலின் பேரில், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் கைது செய்த ஆற்காடு வனச்சரகர் சரவணபாபு தலைமையிலான வனத்துறை போலீசார், அவர்கள் மீது வனவிலங்குகளை துன்புறுத்துதல், வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: சிவா, ராணிப்பேட்டை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: