சமண மதத்தின் 24-ஆவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர். அவர் கிமு 599 ஆண்டு பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நல்லறிவு, நன்னடத்தை மற்றும் நன்னம்பிக்கை ஆகிய மூன்றையும் பின்பற்றிய மகாவீரர் பிறந்தநாள், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜெய்யின் சமூகத்தினரால் (சமண சமயத்தினர்) கொண்டாடப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி ஊட்டி மொயின் பஜார் பகுதியில் அமைந்துள்ள ஜெயின் கோவிலில் இருந்து நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்த, சிறிய தேரின் முன்னர் பாடல்கள், இசைக் கருவிகள் முழங்க, சிறு தேர் பவனி நடைபெற்றது.இதில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது.

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link