ஆஸ்கர் விருதை வென்ற ELEPHANT WHISPERERS என்ற ஆவணக் குறும்படத்தின் மூலம் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலகளவில் பிரபலம் அடைந்தனர். தாயைப் பிரிந்த 2 யானைக் குட்டிகளை பராமரித்து வளர்த்து வந்த தம்பதிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

இந்த நிலையில், பொம்மன், பெள்ளி தம்பதியை சந்திப்பதற்காக வரும் 9ம் தேதி பிரதமர் மோடி, முதுமலை அருகே உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தருகின்றன. இதனையொட்டி, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

அதன் ஒரு பகுதியாக, 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அப்பகுதியில் உள்ள ஓய்வு விடுதிகள், உணவகம், சிற்றுண்டியகங்களை உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போன்று, வன விலங்குகளை காண வாகன சவாரியும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வர வேண்டாம் என காப்பக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link