நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் 23 ஆம் ஆண்டு ஆண்டாகஸ்ரீ தர்மசம்வர்த்தனி அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதருக்கு திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஸ்ரீ தர்மசம்வர்த்தனி அம்பாள் சமேத மேலும் ஸ்ரீ கைலாசநாதர் எம்பெருமானுக்கும் 23ஆம் ஆண்டாக திருக்கல்யாணம் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்திற்கு முன்னதாக கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ராஜபக்கணபதி சன்னதியில் இருந்து சீர்வரிசை முளைப்பாரியை நோக்கி பக்தர்கள் அழைத்து வரப்பட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)

அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள கைலாசநாதர் அம்பாள் திருமண மண்டபத்தில் சீர்வரிசைகளை வைத்து பூஜை செய்தனர். பின்னர் ஸ்ரீ தர்மசம்வர்த்தனிக்கும் ஸ்ரீ கைலாசநாதர்க்கும் திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு மகிழ்ந்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link