ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் லீக் ஆட்டத்தில் அதிக வெற்றிகளைப் பெறும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். 16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த வெள்ளியன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முழுவதையும் எந்த கட்டணமும் இன்றி இலவசமாக ஜியோ சினிமா நேரலையாக ஒளிபரப்பி வருகிறது. குஜராத் அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தலா ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளன.

ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளின் நெட் ரன் ரேட் அதிகமாக உள்ளது. குஜராத் +0.700, ராஜஸ்தான் +3.600, பெங்களூரு +1.981 நெட் ரன்ரேட்டை பெற்றுள்ளன. கடந்த சில சீசன்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் இந்த தொடரில் எழுச்சி பெற்றதாகவும், இந்த அணிகள் அதிக வெற்றிகளை லீக் ஆட்டங்களில் செய்யும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டேவிட் ஹஸி கூறுகையில், ‘லீக் சுற்றின் முடிவில் ராஜஸ்தான் அணி முதலிடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது’ என்று கூறியுள்ளார்.

லீக் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களுமான டாம் மூடி, டேரன் கங்கா, ஜேக்கஸ் கலீஸ், ஆரோன் ஃபின்ச், ஸ்ரீசாந்த், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்டோரிடம் கேட்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் முதல் 2 இடங்களை பிடிக்கும் என்று கூறியுள்ளனர். 5 முறை பட்டம் வென்ற மும்பை, 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிகள் தற்போது வரை அதிகம் கவனிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link