நியூஸ் 18 தமிழ்நாடு உள்ளூர்செய்தி எதிரொலியாகராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சி 9வது வார்டு பகுதியில் சாய்ந்து விழும் நிலையில் பழைய, இரும்பு மின்கம்பங்கள் மாற்றப்பட்டு புது மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டுக்கு உட்பட பள்ளிவாசல் தெரு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஸ்டீல் மின்கம்பங்கள் உப்புகாற்று அரிப்பினால் துருப்பிடித்து சேதமடைந்து சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. இந்த அபாயகரமான மின்கம்பத்தால், மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலருக்கு கரண்ட் ஷாக் அடித்து பாதிப்படைத்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மனுக்கள் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டாக எழுந்தது.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
மேலும் படிக்கவும் | ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மினி சரக்குவாகனம்!
இருப்பினும். கடந்த மார்ச் 16ஆம் தேதி சேதமடைந்த மின்கம்பிகளை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து, நியூஸ்18 உள்ளூர் செய்தி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, அப்பகுதியில் பழைய மின்கம்பிகள் மின்வாரியத்துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் புதிய மின்கம்பங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நியூஸ்18 உள்ளூர்-க்குநன்றி பதிவு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: