ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 197 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் களத்தில் இறங்கினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதன்பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பேட்டிங் செய்யத் தொடங்கினர்.

தொடக்க பிரப்சிம்ரம் சிங் 34 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 60 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். அவரும் கேப்டன் ஷிகர் தவனும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜிதேஷ் சர்மா 27 ரன்களும், ஷாரூக்கான் 11 ரன்களும் எடுக்க தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார்.

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 197 ரன்கள் எடுத்துள்ளது. 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

ராஜஸ்தான் அணியில் இன்று விளையாடும் வீரர்கள் – யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் – விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், கே.எம்.ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்

பஞ்சாப் அணியில் இன்று விளையாடும் வீரர்கள் ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link