நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோயிடம் இருந்து கொலை மிரட்டல் வந்தது. லாரன்ஸ் தற்போது டெல்லி திகார் சிறையிலிருந்தாலும் தனது அடியாட்கள் மூலம் சல்மான் கானைக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். தொடர்ந்து இவ்வாறாக நான்கு முறை மிரட்டல் வந்துள்ளது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் சல்மான் கானுக்கு மும்பை போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். அதோடு அவர் வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சல்மான் கான், குண்டு துளைக்காத டொயாட்டோ கார் ஒன்றைப் பயன்படுத்தி வருகிறார். இந்த காரை சமீபத்தில்தான் அவர் வாங்கினார்.

சல்மான் கான்

சல்மான் கான்

ஆனால் இந்த காரில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே தற்போது அதைவிட அதிக தொழில்நுட்ப வசதி கொண்ட குண்டு துளைக்காத நிஸ்ஸான் காரை சல்மான் இறக்குமதி செய்துள்ளார். இந்த கார் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரவில்லை. வளைகுடா நாடுகளில் இந்த கார் மிகவும் பிரபலம் ஆகும். தற்போது சல்மான் கான் இறக்குமதி செய்திருக்கும் கார் அதிக பாதுகாப்பு மற்றும் அதிக விலை கொண்டது. தனியார் நிறுவனம் மூலம் இக்கரை இறக்குமதி செய்துள்ளார்.



Source link