திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. தற்போது தக்காளி விலை மிகவும் குறைவாக இருப்பதால், விவசாயிகள் நஷ்டமடைவதோடு, கஷ்டப்பட்டு விளைந்த தக்காளி பழங்களை குப்பைகளில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, தக்காளி பயிரிடும் ஆர்வமும் பெருமளவு குறைந்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நூத்துலாபுரத்தை சேர்ந்த விவசாயி நாகராஜ் என்பவர் தனது தோட்டத்தில் தக்காளி நாத்து நடும் பணியை துவங்கியுள்ளார்.

மேலும் தக்காளி சாகுபடிக்கு ஏற்ற மாதங்களாக ஜூன் , ஜூலை , செப்டம்பர் , டிசம்பர் மாதங்களில் விளங்குகிறது. எனவே மார்ச் மாதத்தில் தக்காளி நாட்டு நடவு செய்து மூன்று அல்லது நான்கு மாதங்கள் தினசரி உழைத்து போதிய உரம், தண்ணீர், பூச்சி மருந்து போன்றவை சரியான நேரத்தில் தெளித்து பராமரித்து வந்தால் தக்காளி செடி வளர்ந்து காய் காய்க்க தயாராகி விடும்.

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

இன்றைய தேதிக்கு தக்காளி பழம் மலிவான விலைக்கு விற்பனையானாலும் , கண்டிப்பாக ஜூன் ஜூலை மாதங்களில் நல்ல விலைக்கு விற்பனையாகும் என நம்பிக்கையுடன் விளைநிலத்தில் இறங்கி உள்ளோம் என விவசாயி கூறியுள்ளது.

இதையும் படிங்க | கொடைக்கானல் போறீங்களா? அப்போ இதை கேட்டு போங்க!

மேலும்,அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து, போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும் எனவும், அயராது விளை நிலத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளின் தக்காளியை பாதிக்காத வகையில் அரசாங்கம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் விவசாய பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link