காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் 08.04.2023 அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் கோளிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் ராவத்தநல்லூர், வாலாஜாபாத் வட்டத்தில் பூசிவாக்கம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் நடைபெறும் சிறுமாங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் நடைபெறும்.
மேற்கண்ட கிராமங்களில் வசிக்கும்பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)
இதையும் படிங்க | புருஷாமிருக வாகனத்தில் உலா வந்த காஞ்சி ஏகாம்பரநாதர்.. பக்தர்கள் பரவசம்..
மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: