திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, ‘எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடனை செலுத்தினார்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதை தொடர்ந்து முதலமைச்சராக வேண்டும் என வேண்டி நடிகர் கஞ்சா கருப்பு தீச்சட்டி எடுக்கவுள்ளதாக பேட்டியளித்துள்ளார். இந்நிலையில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் இருந்து கஞ்சா கருப்பு அவரது மனைவியுடன் அக்னி சட்டிகள் ஏந்தியும், மகன் பால்குடம் சுமந்தும், மகள் வேப்பிலை உடை அணிந்தும், பூக்கூடை ஏந்தியும் அவர்களின் உறவினர்கள் புடைசூழ ஊர்வலமாக கோயிலுக்கு சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு “எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக இருக்கிறார். அடுத்து அவர் தமிழக முதலமைச்சர் ஆக வேண்டும். நல்ல ஆட்சி புரிய வேண்டும்” என்று குடும்பத்துடன் வேண்டிக் கொண்டு, நேர்த்திக்கடன் செலுத்த வந்ததாகக் கூறினார்.

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

மேலும், “ஆளுங்கட்சியைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அது மக்களுக்கே தெரியும். இன்றைய மின்சாரக் கட்டணம், விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனால், நல்ல ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்று சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டேன் எனத் தெரிவித்தார். , இடி முழக்கம், சபரி ஐயப்பா போன்ற படங்களில் நடித்துள்ளேன்” என்று கூறினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link