கொல்கத்தா: 16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

205 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபிக்கு கடந்த போட்டியை போலவே, அதிரடி துவக்கம் கொடுத்தனர் விராட் கோலியும், ஃபாஃப் டு பிளெசிஸ்ஸும். ஓவருக்கு 10 ரன் ரேட்டில் அதிரடி காட்டிய நிலையில், அவர்களை விரைவாக பிரித்தார் மூத்த வீரர் சுனில் நரேன். அவர் முதல் விக்கெட்டாக 21 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியை கிளீன் போல்டாக்க, 23 ரன்கள் எடுத்திருந்த டு பிளெசிஸ்ஸை அடுத்த ஓவர் வீசிய வருண் சக்கரவர்த்தி கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார்.Source link