ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பிடாரிச்சேரி கிராம மக்கள் அரசு தொடக்கப்பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசையாக கற்றல் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை வழங்கியது அப்பகுதி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பிடாரிச்சேரி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், 75 மாணவ, மாணவிகள் பயந்து வருகின்றனர். இங்கு, மூன்று ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பிடாரிச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி சீராக ரூ.2 லட்சம் மதிப்புடைய கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் சுத்திகரிப்பு கருவி உள்ளிட்ட கல்வி சீராக வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

இந்நிலையில், கல்வி சீர்வரிசை கொண்டுவந்த கிராம மக்களை, அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து, பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பூமாலை அணிவித்து வரவேற்றனர். கல்விசீர் வழங்கிய கிராம மக்கள் பரமக்குடியில் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link