காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்ட (PMAY(G) சிறப்பு முகாம்) நடைபெற்றது.

இம்முகாமில் PMAY(G) திட்டத்தின் கீழ் SECC மற்றும் Awaas Plus-ல் வீடு கட்ட ஒதுக்கீடு வழங்கப்பட்டது, பணி துவங்கப்படாத பயனாளிகள் மற்றும் அனுமதி வழங்கப்பட வேண்டிய பயனாளிகள், திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் (சிறப்பு முகாம்) மூலம் பயனாளிகள் எடுத்து விழிப்புணர்வு அளித்து பணியினை துரிதமாக தொடங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி கேட்டுக்கொண்டார். மேலும், இதேபோன்று உத்திரமேரூர் ஒன்றியத்தில் 11.04.2023 தேதியிலும், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 12.04.2023 ஆம்தேதியிலும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 13.04.2023 ஆம்தேதிகளிலும் சிறப்பு முகாம் (சிறப்பு முகாம்) நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

இதில் அனைத்து பயனாளிகளும் கலந்துகொள்ளும் வகையில், உதவி/ஒன்றியப் பொறியாளர்கள், பணிமேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் கலந்துகொள்ளும் வகையில் உரிய அறிவுரை வழங்கி, சிறப்பு முகாம் (சிறப்பு முகாம்) – இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

சிறப்பு முகாமினை தொடர்ந்து, குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி பார்வையிட்டு, அங்கு வளர்க்கப்படும் காளான் வளர்ப்பு முறை குறித்து கேட்டறிந்தார். இம்முகாமில்ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) அர்பித்ஜெயின், குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link