திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவிகள் மீது குடிபோதையில் தாக்குதல் நடத்திய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் அருகே நீலக்குடியில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு விடுதியில் தங்கி படிக்கும் 2 மாணவிகள், அருகில் உள்ள கங்களாஞ்சேரி பகுதிக்கு சென்றுள்ளனர். உணவகத்தில் சாப்பிட்ட அவர்கள், உணவகம் அருகே உள்ள ஏடிஎம்மிற்கு சென்றுள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(திருவாரூர்)
அப்போது, அங்கு நின்றிருந்த 4 இளைஞர்கள், மாணவிகளின் துப்பட்டாவை பிடித்து அத்துமீறியுள்ளனர். மாணவிகள் பயந்துகொண்டு உணவகத்திற்குள் ஓடிய நிலையில், அங்கும் புகுந்து கன்னத்தில் சரமாரியாக அறைந்து தாக்கியுள்ளனர். கத்தியை காட்டி மிரட்டி செல்போனையும் பறித்துள்ளனர். தாக்குதலை தடுக்க வந்த உணவக உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தெரிவிக்கப்பட்ட புகாரில், வண்டாம்பாளை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை மற்றும் வணிகராஜா திருக்கண்ணபுரம் காவல்நிலையத்தினர் கைது செய்தனர். தப்பியோடிய மேலும் 2 இளைஞர்கள் தேடப்பட்டு வருகின்றனர். காயமடைந்த மாணவிகள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்: ராஜசேகர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: