புதுடில்லி-நாட்டில் நேற்று ஒரே நாளில் 6,000 பேருக்கு மத்திய தொற்று உறுதியானதை அடுத்து, தொற்று தடுப்பு நடவடிக்கையில் விழிப்புடன் செயல்படும் வகையில், மாநில அரசுகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக, நாடு முழுவதும் தொற்று பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 6,050 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது.

தற்போது நிலவரப்படி, 28 ஆயிரத்து 303 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், புதுடில்லி, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து சுகாதாரத்துறை அமைச்சர்கள், தலைமைச் செயலர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர்:

‘இன்ப்ளூயன்ஸா’ காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாச தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளை அடையாளம் காணும் பணியை துவங்க வேண்டும். பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கடந்த கால மாநில அலைகளின், மத்திய – அரசுகள் இணைந்து பணியாற்றிய அதே வேகத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

‘எக்ஸ்பிபி.1.5’ என்ற உருமாறிய வகை வைரசின் செயல்பாடுகளை உலக சுகாதார நிறுவனம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் ஆறு வகையான உருமாறிய வைரஸ்களையும் கண்காணித்து வருகிறது.

இதில், ஒமைக்ரான் வகை வைரஸ் மீது முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. இதர உருமாறிய வகைகள் அவ்வளவு தீவிரத்தன்மையுடன் இல்லை.

மேலும், எக்ஸ்பிபி.1.16 வகை வைரசின் ஆதிக்கம் கடந்த பிப்., மாதம் 21.6 சதவீதத்தில் இருந்து மார்ச்சில் 35.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, இறப்பு விகிதங்கள் அதிகரித்ததற்கான சான்றுகள் இல்லை.

பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி, தொற்று தடுப்பு நடவடிக்கை என்ற ஐந்து அம்சங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டிய தேவை உள்ளது. தற்போதைய நிலவரப்படி 10 லட்சம் பேரில், 100 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

நாட்டில் உள்ள எட்டு மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கேரளா, மஹாராஷ்டிரா, புதுடில்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 10 சதவீதமாக உள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, புதுடில்லி, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொற்று விகிதம் 5 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.

எனவே, அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில் கவனம் எடுத்து, மருத்துவமனைகளில் படுக்கை வசதி, அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் தயார் நிலை குறித்து ஏப்., 8, 9ம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும், வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவசரகால ஒத்திகை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘அச்சம் தேவையில்லை!’

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், நிருபர்களிடம் நேற்று:தமிழகத்தில் பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில், 273 ஆக அதிகரித்துள்ளது. விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு, பரிசோதனையை அதிகரிக்கும்படி கேட்டுள்ளோம். தினமும் செய்யப்படும் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை எண்ணிக்கை, 11 ஆயிரமாக அதிகரிக்கப்படும். பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.Source link