சீனாவை விட்டுத் தனி நாடக தைவான் பிரிந்துசென்றாலுமேகூட, தைவானை இன்று சீனா தனக்குட்பட்டதாகவே சொந்தம் கொண்டாடுகிறது. அதே சமயம், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஆனால், தைவான் அதனைக் கண்டுகொள்ளாமல், அமெரிக்காவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டிவருகிறது. இதன் காரணமாக, சீனா அவ்வப்போது, தைவான் எல்லையில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு அந்த நாட்டை அச்சுறுத்தி வருகிறது.

இப்படியான சூழலில், தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செல்வதாகத் தகவல் வெளியான உடனேயே, `தைவான் அதிபர் அமெரிக்காவுக்குச் சென்றால் அதற்குப் பதிலடி கொடுக்கப்படும்’ என தைவானைச் சீனா அச்சுறுத்தியது.
ஆனாலும், தைவான் அதிபர் அமெரிக்காவுக்குச் சென்று, அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியைச் சந்தித்தார். இதனால் தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் மூன்று நாட்கள் போர் பயிற்சிகள் நடத்தப்படும் என சீனா அறிவித்தது.

அதனடிப்படையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக தைவானைச் சுற்றி இன்று காலையில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது. இதன் காரணமாகத் தைவானில் பதற்றம் நிலவிவருகிறது. இந்த நிலையில், `தைவான் எங்கள் தாய்மண், அதனைக் காக்க நாங்கள் போராடுவோம்’ என தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
#தைவான் எங்கள் தாயகம், நாம் எங்கு சென்றாலும் அல்லது என்ன சந்தித்தாலும், அவள் எப்போதும் அழகாகவும் அழகாகவும் இருக்கிறாள். இந்த மண்ணின் ஒவ்வொரு கதையும் நம் நினைவுகளில் பதிந்துள்ளது. நாங்கள், #ROCarmed Forcesஎங்கள் தாயகத்தை காக்கவும், நம் வீட்டை ஒன்றாக பாதுகாக்கவும் முழு மனதுடன் போராடுகிறோம். pic.twitter.com/oI2eply6N6
— 國防部 தேசிய பாதுகாப்பு அமைச்சகம், ROC (@MoNDefense) ஏப்ரல் 9, 2023
இது குறித்து தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தைவான் எங்களின் தாய்மண். இந்த மண்ணின் ஒவ்வொரு கதைகளும் எங்களின் நினைவுகளில் பதிந்துள்ளன. எங்களின் தாய்மண்ணையும், வீட்டையும் காக்க முழுமனதோடு போராடுகிறோம்“என வீடியோவுடன் ட்வீட் செய்திருக்கிறது.