ஆடு, மாடு, எருமை போன்றவற்றின் பாலை போன்று, கழுதையின் பாலும் பிரபலமான ஒன்று. தாய்ப்பாலுக்கு மாற்றாகவும், புற்றுநோய் கட்டி, இருமல், சளித்தொல்லை, போன்றவற்றிற்கு மருந்தாகவும் கழுதைப்பால் பயன்படுவதாகக் கூறப்படுகிறது.
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வயிறு மந்தம், சூடு, காய்ச்சல் போன்றவற்றிற்கும் கழுதைப் பால் சிறந்த மருந்தாக நம்பப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கழுதைப்பால் குடிக்க வைப்பது வழக்கமான ஒன்று.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஜோதி நகர், ஸ்டாலின் காலனி, சுப்பிரமணிய புரம், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழுதைப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது. விருத்தாசலத்தைச் சேர்ந்த நடேசன், தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் 10 கழுதைகளை வைத்து இப்பகுதிகளில் கழுதைப்பால் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சங்கு கழுதை பால் 70 ரூபாய்க்கும் ; ஒரு லிட்டர் கழுதை பால் 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கழுதை முடியினால் தாயத்தும் 70 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இது தவிர கழுதையிடம் மூச்சு பிடிக்கவும் 70 ரூபாய் வசூல் செய்கிறது.
உங்கள் நகரத்திலிருந்து(தூத்துக்குடி)
இது தவிர சரும பிரச்னை சரிசெய்வதாகக் கழுதையின் சிறுநீரையும் வாங்கிச் செல்கின்றனர். கழுதையிடம் இருந்து எதுவும் கிடைக்கும் மருத்துவ குணமே என நம்பப்படுவதால் கிராமங்களில் அதன் விற்பனை அமோகமாக உள்ளது.
அந்த காலத்தில் எங்கள் பெற்றோர் கழுதைபால் வாங்கி கொடுத்தனர். இதனால் பல்வேறு நோய்கள் குணமாகி உள்ளது. கழுதைபால் குடித்த காரணத்தினால் தற்பொழுது நாங்கள் ஆரோக்கியமாக உள்ளோம். இப்பொழுது கழுதைகளை பார்ப்பது அரிதாக உள்ளது. முன்பு குழந்தை பிறந்ததும் கழுதைபாலில் தான் சேனை வாய்ப்பது வழக்கம். ஆனால் இன்றைக்கு சீனிபாலில் வைத்து வருகிறோம். எவ்வளவு விலை என்றாலும் கழுதைப்பால் வாங்கி கொடுங்கள் என்று மூதாட்டி சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய கழுதைபால் விற்பனை செய்யும் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த நடேசன், ‘கழுதைப் பால் குடித்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தாய்ப் பாலுக்கு அடுத்து கழுதைப் பால் தான். தற்பொழுது டாங்கி பால் என்று விற்பனைக்கு வரத்தொடங்கி விட்டது. மேலும் கழுதைகள் விலையும் அதிகமாகிவிட்டது. 4 கழுதையில் இருந்து தான் 1 லிட்டர் கறக்க முடியும். கழுதையின் விலை அதிகமாகி விட்டதால் கழுதைபால் விலையும் கூடியுள்ளது. மேலும் கழுதையின் சிறுநீர் 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும், சொறி உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கமளித்த மருத்துவர் பிரபு, ‘கழுதைப் பாலினை குடிப்பதால் எந்த நன்மையும் இல்லை. இதனால் நோய் குணமாக வாய்ப்பு இல்லை. கழுதையின் சிறுநீர் எடுத்து பூசினால் புண் குணமாகும் என்பது பொய். இதனால் புதுவித நோய்கள் தான் வரும். தாய் பால் தான் என்றைக்கும் சிறந்தது. தாய்பாலூக்கு பிறகு பசும்பால் கொடுக்கலாம், தாய் பாலை தவிர்த்து, எந்த பாலாக இருந்தாலும் காய்ச்சி தான் குடிக்க வேண்டும்.
இப்படியாக மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் , கழுதைப்பால் மீதான ஈர்ப்பு, கிராமப்புறங்களில் இன்றும் தொடர்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: