சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சஹாருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து அணி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் நடந்த முதல் போட்டியில் குஜராத் அணியிடம் சென்னை தோல்வி அடைந்தாலும், அடுத்து நடைபெற்ற 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஃபார்முக்கு வந்துள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்னை அணி வென்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 157 ரன்கள் எடுக்க சென்னைஅணி 18.2 ஓவரில் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்தது. முன்னதாக காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியில் இடம்பெறவில்லை. சென்னை அணியின் மிக முக்கியமான ஆட்டக்காரராக கருதப்படும் அவர், அணியில் இடம்பெறாதது சி.எஸ்.கே. ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இதேபோன்று நேற்றைய போட்டியில் ஒரு ஓவரை மட்டுமே வீசிய நிலையில் பந்து வீச்சாளர் தீபக் சஹார் காயம் காரணமாக வெளியேறினார். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்டுள்ள காயம் குறித்து சென்னை அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, ​​சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் கால் விரலில் ஏற்பட்ட சிறிய காயத்தால் அவர் வெளியேறினார். ஸ்டோக்ஸ் தனது கால் விரலில் காயம் ஏற்படுவதற்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் 2 ஐபிஎல் 2023 போட்டிகளில் விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சனிக்கிழமை நடந்த ஆட்டத்தின் போது தீபக் சாஹரின் தொடை தசையில் காயம் ஏற்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவ பணியாளர்கள், பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் காயத்திலிருந்து குணம் அடைய தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இருவரின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்கள் கவனிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சி.எஸ்.கே.வின் அடுத்த போட்டிகளில் இருவரும் பங்கேற்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படாததால், இருவரும் இன்னும் சில நாட்களுக்கு ஓய்வில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link