“அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை எடுப்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறியுள்ளது. தமிழக அரசு, இதை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை விரைவில் இயற்ற வேண்டும்” என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்களில் “வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பவர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை 2014-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டது. இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. அதனால், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என்று தங்கள் மனுக்களில் கூறியுள்ளனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தன் உத்தரவில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு அரசிடம் விவரம் கேட்டுள்ளதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதியின் உத்தரவில், “வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும்

இதேபோல் வணிக நோக்கில் நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குபடுத்தவும், வரைமுறைப்படுத்தவும் பிற மாவட்டங்களில் சட்டமோ விதிகளோ ஏதுமில்லை.



Source link