நொய்டா: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் லாவா பிலேஸ் 2 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்:
- 6.5 இன்ச் ஹெச்டி+ ஐபிஎஸ் டிஸ்பிளே
- 90Hz ரெப்ரெஷ் ரேட்
- 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- யுனிசாக் டி616 அக்டா-கோர் பிரஸசர்
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
- டைப் சி யுஎஸ்பி
- 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் ஈஐ டியூயல் கேமரா
- 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- மூன்று வண்ணங்களில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது
- இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதி. ஆனால், இரண்டிலும் 4 ஜி நெட்வொர்க் இணைப்பு வசதி மட்டுமே பெற முடியும்
- இந்த போனின் விலை ரூ.8,999
Blaze 2: Naya Blaze Sabse Tez* அற்புதமான அம்சங்களுடன்.
விற்பனை ஏப்ரல் 18, மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.
விவரக்குறிப்புகளைக் காண்க: https://t.co/8joIcuqqUd
*AnTuTu 9.5.5 பெஞ்ச்மார்க் ஸ்கோரின்படி < INR 10K பிரிவிற்கு#பிளேஸ்2 #லாவாமொபைல்ஸ் #பெருமையுடன் இந்தியன் pic.twitter.com/UWU4FwBTMq