இளம் நடிகர்களுக்கு சவால் விடும் சல்மான் கான்
10 ஏப், 2023 – 11:04 IST

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சல்மான் கான். விரைவில் இவரது நடிப்பில் உருவான கிஸி கி பாய் கிஸி கி ஜான் படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் சல்மான்கான் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “ஹிந்தி சினிமா துறைக்கு வந்துள்ள இளம் நடிகர்கள் பலர் திறமையானவர்களாக இருக்கிறார்கள். கடினமாக உழைக்கிறார்கள். அதற்காக சீனியர் நடிகர்களான எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் ” என கூறியுள்ளார்.