ஐபிஎல் போட்டியில் ரிங்கு சிங் 5 சிக்சர்கள் அடித்த, கடைசி ஓவரை வீசிய குஜராத் வீரர் யஷ் தயாளுக்கு, கொல்கத்தா அணி உத்வேகம் அளிக்கும் வகையில் ஆறுதல் கூறியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா வீரர் ரிங்கு சிங், கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் ஒரே இரவில் ரிங்கு சிங் ஹீராவாக உருவானார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர். அதே சமயம், கடைசி ஓவரை வீசிய இந்திய இளம் வீரர் யஷ் தயாள் துக்கத்தின் உச்சிக்கு சென்றார்.
கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் யாஷ் தயாள் 69 ரன்கள் கொடுத்து இறந்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த வீரர்கள் பட்டியலில் யாஷ் 2 ஆம் இடத்திற்கு சென்றார். இதனால் கடும் மனதுயரில் இருந்த யாஷிற்கு, எதிரணியான கொல்கத்தா நிர்வாகம் ஆறுதல் தெரிவித்து ஊக்கமளித்துள்ளது.
சின் அப், பையன். அலுவலகத்தில் ஒரு கடினமான நாள், கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கு நடக்கும். நீங்கள் ஒரு சாம்பியன், யாஷ், நீங்கள் வலிமையாக திரும்பி வருவீர்கள் 💜🫂@குஜராத்_டைட்டன்ஸ் pic.twitter.com/M0aOQEtlsx
— கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (@KKRiders) ஏப்ரல் 9, 2023
யாஷை சாம்பியன் என்ற குறிப்பிட்ட அணி நிர்வாகம், மீண்டும் வலுவாக திரும்பி வாருங்கள் என்று உத்வேகம் அளித்துள்ளது. இதே போன்று இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதானும் யஷ் தயாளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வலுவாக இருந்தால், அனைத்து விஷயங்களையும் உங்களால் மாற்ற முடியும் என்று இர்பான் பதான் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டியில் கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவை இருந்தபோது, அந்த அணியின் ரிங்கு சிங் கடைசி 5 பந்தில் 5 சிக்சர்களை அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற்றார். முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா அணி ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டத்தின் உதவியால் வெற்றி பெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: