`ஸ்டைலா கெத்தா’ எனக் கால் மீது கால் போட்டு (குறுக்கு – கால்) உட்கார்பவர்களைப் பார்த்திருப்போம். இப்படி உட்கார்வது சௌகர்யமாக இருப்பதாகப் பலரும் கூறுவதுண்டு. ஆனால் இப்படி அமர்வது நல்லதல்ல, பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு குறித்த முடிவுகள் `International Journal of Environmental Research and Public Health’ என்ற இதழில் வெளியாகி உள்ளது.
இது குறித்து இடுப்பு எலும்புகளுக்கு நிறமும் தெரபிஸ்ட் ஹீதர் ஜெஃப்கோட் கூறினார், `கால் மீது கால் போட்டு அமர்வது, இடுப்பு எலும்புகளை ஒன்று விட மற்றொன்று நீளமாக வைக்கும். இது இடுப்பின் சீரான நிலையில் மாற்றத்தை (தவறான சீரமைப்பு) உருவாக்குகிறது.
ஒருவர் எவ்வளவு நேரம் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர்களின் இடுப்புத் தசையின் நீளம் மற்றும் எலும்புகளின் அமைப்பு காலப்போக்கில் மாறும்.
கால்கள் குறுக்காக வைத்து உட்கார்வது, உங்கள் இடுப்பில் தசை முறிவை ஏற்படுத்தலாம். உங்களுக்கு முதுகு அல்லது இடுப்பு பிரச்சனைகள் இருப்பின், அந்தப் பிரச்சனைகள் மேலும் தீவிரமாலாம்.