பெங்களூரு-வெளி மாநிலங்களில் திருடிய கார்கள், போலிகள், ‘நம்பர் ஆவணங்கள்’ பொருத்தி விற்பனை செய்து வந்த ஆறு பேரை, ஹைகிரவுண்ட் போலீசார் கைது செய்தனர். மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரு குயின்ஸ் சாலையின் ஷோ ரூமில், ம.ஜ.த., – எம்.எல்.சி., போஜேகவுடாவின் கார் பதிவு எண் கொண்ட, ‘இன்னோவா’ கார் நிறுத்தப்பட்டது.

இதை பார்த்த அவரது உதவியாளர் மாதேஷ், போஜகவுடாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு விசாரித்தார். தன் கார் வீட்டிலேயே இருப்பதாக எம்,எல்.சி., கூறினார்.

அதன்பின் ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில், மாதேஷ் புகார் செய்தார்.

வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், நசீப், 38, மஞ்சுநாத், 45, சையத் ரியாஜ், 34, இம்ரான், 34, நயாஜ்கான், 32, ஷபாஜ் கான், 31, ஆகியோரை கைது செய்தனர். மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான நசீப், தன்னை ‘கார் டீலர்’ என கூறிக்கொண்டு, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, வெளி மாநிலங்களில் திருடப்படும் கார்களை, குறைந்த விலைக்கு வாங்குவார்.

இந்த கார்களுக்கு போலியான பொருட்கள், நம்பர் பிளேட் தயாரித்து வந்தது, விசாரணையில் தெரிந்தது.



Source link