விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தன்(29), சென்னை நங்கநல்லூர் என்.ஜி.ஓ. சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயந்தன் கடந்த மார்ச் 18ஆம் தேதி மதியம் நங்கநல்லூர் சகோதரி வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வேலைக்குச் சென்றார்.

அப்போது பணி முடிந்தது அங்கிருந்து சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் போய்விட்டு தான் வருவேன் என்று சகோதரியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் ஜெயந்தன் அவ்வாறு கூறிவிட்டு சென்று சில நாட்கள் ஆகியும் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயந்தனை காணவில்லை என அவரது சகோதரி 20 நாட்களுக்கு முன் புகார் அளித்தார். அதன்படி ஜெயந்தனின் செல்போன் தொடர்பு மூலம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயந்தனும், தானும் காதலித்து திருமணம் செய்ததாகவும், அவரை பிரிந்துவிட்ட நிலையில் புதுக்கோட்டைக்கு வந்து பிரச்னை கொடுத்ததால் ஜெயந்தனை வெட்டிக்கொன்று உடலை கோவளத்தில் வீசியதாகவும் பாக்கியலட்சுமி வாக்குமூலம் அளித்தார். இதனைத்தொடர்ந்து ஜெயந்தனின் உடலை போலீசார் கடந்த 2 வாரங்களாக தீவிரமாக தேடி வந்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

இதையும் படிங்க : ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி… ஏமாற்றிய ஊழியர் சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு – கடலூரில் பயங்கரம்!

இந்நிலையில், கோவளத்தில் பூமிநாதர் சிவன் கோயில் அருகே உள்ள குட்டையில் தீயணைப்புத்துறையினர் தேடியபோது 2 பிளாஸ்டிக் கவர்களில் எரிந்த நிலையில் ஜெயந்தனின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து ஜெயந்தனின் உடலை பரங்கிமலை உதவி ஆணையர் அமீர் அகமது முன்னிலையில் பாக்கியலட்சுமி அடையாளம் கண்டு உறுதி செய்தார். பின்னர் கண்டெடுக்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது பாக்கியலட்சுமியின் முகத்தை போலீசார் மறைத்தபடி அழைத்து வந்ததால் ஜெயந்தனின் உறவினர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாக்கியலட்சுமியின் நண்பர் சங்கர் மற்றும் வேல்முருகன் இருவரும் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : சுரேஷ்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link